Monday, November 19, 2012

ஐன்ஸ்டினின் கடவுள் பற்றிய கடிதம்!


அறிவியலாளர் திரு ஐன்ஸ்டின் அய்யா அவர்களின் ஒரு கடிதம் 4 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது என்ற செய்தியைப் படித்தவுடம் அக்கடிதத்தில் என்ன உள்ளது ,அத்னை தமிழாக்கம் செய்து நம் சொந்தங்களுடன் பகிர்ந்தால் என்ன என தோன்றியதின் விளைவே இப்பதிவு.


ஐன்ஸ்டின் அய்யா குறித்து அறியாதோர் இருக்கவே முடியாது என்னும் அள்வுக்கு அறிமுகம் தேவையற்றவர் எனினும் நியுட்டனின் ஈர்ப்பு  விசைக்கு மாற்றுக் கொள்கை[ பொது சார்பியல் கொள்கை General theory of relativity] கண்டுபிடித்தவர்.ஒளியின் வேகம் ஒரு மாறிலி[சிறப்பு சார்பியல் கொள்கை Special relativityஎன்பதும், பருப் பொருளின்[matter] இன்னொரு பரிமாணமே ஆற்றல்[E=mc^2] என்பதும் இவரின் முக்கிய கொள்கையாக்கங்கள் ஆகும்.

யூதராக இருந்தாலும் யூத இன மேட்டிமை மீது கடுமையான விமர்சனம் வைத்த மனித நேயர்.





Key Passages:

கடந்த சில நாட்களாக உங்கள் புத்தகம் பற்றி பரபரப்பாக பல விடயங்கள் அறியமுடிந்தது. உங்கள் புத்தகத்தின் பிரதியை எனக்கு அனுப்பியதற்கு நன்றி.
புத்தகம் படித்தஉடனே எனக்கு தோன்றியது  நம்மிடையே உள்ள ஒற்றுமைகள்தான். சான்றுகள் மீதான எதார்த்த அணுகுமுறை கொண்டு தனிப்பட்ட ,மனித சமூகத்தின் வாழ்வை ஆய்வதுதான் அந்த ஒற்றுமை எனலாம்.

கடவுள் என்பது மனித பலகீனத்தின் உருவாக்கமாகவும்,வெளிபாடாகவும் மட்டுமே எனக்கு புலப்படுகிறது.பைபிள்[மத புத்தகம்] என்பது மதிப்புக்குறியஆனால்  பழைய புராண ,குழந்தைகள் கேட்கும்அம்புலிமாமா கதைகளின் தொகுப்பு மட்டுமே.

எவ்வளவு நுட்பமான ,தர்க்கரீதியான தத்துவ விளக்கமும் இக்கருத்தை மாற்ற முடியாது.இம்மாதிரி நுட்பமான தத்துவ விளக்கங்கள் விளக்குபவரின் இயல்புக்கேற்ப ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன தவிர அந்த புத்தக்த்தின் எழுதப்பட்டுள்ளவைக்கு தொடர்பற்றவை.

[அதாவது மத புத்தகத்தில் அறிவியல்,உருவகமாகப் பார்க்க வேண்டும், சூழலுக்கு பொருத்தி பார்க்க வேண்டும்,அந்த கருத்து  அப்போது மட்டுமே, ...இந்த மாதிரி..சார்வாகன்]

.என்னைப் பொறுத்தவரை யூதமதமும் பிற மதங்கள் போல பழைய அம்புலிமாமா கதைகள்,மூட நம்பிக்கைகள் அனைத்தையும் பழைய கள்ளை புதிய புட்டியில் ஊத்தி கொடுப்பது போல்தான்... .


யூதர்களின் ஒருவன் என மகிழ்சியுடன் நான் அறிவித்துக் கொண்டாலும், அவர்களோடு ஒத்த சிந்த்னை கொண்டு இருந்தாலும், பிற [இன,மத] மக்களை விட யூதர்களிடம் வித்தியாசமாக எந்த மேம்பட்ட குணமோ தகுதியோ  இல்லை எனவே கூறுகிறேன்.

என் அனுபவத்தில் இருந்து இப்போதைய சூழலில் தங்களை மோசமான நிலைக்கு ஆளாதஅளவுக்கு போதிய பாதுகாப்பு சக்தியை கொண்டு இருக்கிறார்கள் என்பதைத் தவிர [கடவுளால்]தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என குறிப்பிட்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.


 நீங்கள் யூத இன மேட்டிமை என பெருமை பாரட்டுவதும். அதனை வெளியில்  மனிதன்,உள்ளே யூதன் என இரு எல்லைகளிலும் நின்று பாதுகாப்பதும் என்னை வருத்தத்திற்கு ஆளாக்குகிறது.

ஒரு மனிதனாக செய்த வினைகளின் பலனுக்கு விலக்கு கோருவதும் ,இல்லையெனில் ஏற்போம் என்பதும்,ஒரு யூதனாக ஓரிறைக் கொள்கையின் உயர்வு என தூக்கிப் பிடிப்பதுமே ஆகும்

[அதாவது யூதர்கள் தாங்கள் 2000 வருடம் துன்புற்றோம் என்பதும்,கடவுள் இந்த தேசத்தை எங்கள்க்கு கொடுத்தார் என்ற வாதங்கள்  பாலஸ்தீன ஆக்கிரமிப்பை, துன்புறுத்துவதை நியாயப் படுத்தாது என்கிறார். அவர் இஸ்ரேல் என்னும் நாடு உருவானதை எதிர்த்தார்,பாலஸ்தீனர்களோடு யூதர்கள் ஒரே நாடாக ஒன்றுபட்டு வாழவே விரும்பினார்.கடிதத்தின் சில பகுதிகள் மட்டுமே கிடைத்தது என்பதால் விளக்கம் அவசியம் ஆகிறது]

குறிப்பிட்ட காலத்திற்கான காரண காரியம் முழுமையானது அல்ல,இதனை தத்துவமேதை ஸ்பினோஜா மிக அருமையாக் முதன்முதலில் விளக்கினார்

[அதாவது மனித சமூக வரலாற்றை ஆதியில் இருந்து பார்த்தால் மட்டுமே மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக நாகரிகம் அடைந்ததும்,கொள்கை கோட்பாடுகள் வரையறுத்த வரலாறும் தெரியவரும்.பாருச் ஸ்பினோசா[Baruch Spinoza and later Benedict de Spinoza (24 November 1632 – 21 February 1677) ] எனப்படும் யூத_டச்சு தத்துவமேதையின் பைபிள்,ஓரிறைக் கொள்கையின் மீதான விமர்சனங்களே 18 ஆம் நூற்றாண்டு பைபிள் விமர்சனம் ஆய்வுகளுக்கு அடித்தளம் இட்டது. ‍]

 உருவ,முன்னோர் ,இயற்கை  வழிபாடு போன்றவை உள்ளடங்கிய மதங்கள் ஓரிறைக் கொள்கையால் முழுதும் இல்லாமல்  போய் விடவில்லை.இச்சூழலில் அம்மதத்தவரிடம் ஒழுக்க கோட்பாடுகள் இல்லை அல்லது தரம் அற்றவை என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம்.ஆனால் அப்படி அல்ல!!!
.
நாம் இருவரும் சில அறிவுசார் கருத்துகளில் மாறுபட்டாலும் பல அடிப்படை விடயங்களில் ஒன்று படுகிறோம்[.கா மனித நடத்தை மதிப்பீடுகள்,] என்றே எண்ணுகிறேன். நமது அறிவுசார் முட்டு கொடுத்தல்களும்,பகுப்பாய்வுகளும் [மனோ தத்துவ மேதை ஃப்ரய்டின் மொழியில்]மட்டுமே வித்தியாசப்படுகின்றன்.

ஆகவே சான்றுகள் உள்ளஉறுதிப் படுத்தப்பட்ட விடயங்களை நாம் விவாதித்தால் மட்டுமே நம் ஒருவருக்கொருவர் மீதான சரியான புரிதல்கள் ஏற்படும் என நினைக்கிறேன்.

நட்புடன் கூடிய அன்பின் வாழ்த்துக்களுடன்
ஐன்ஸ்டின் 






படித்தில்  பிடித்ததை  பகிர்ந்து கொள்வதில்  மகிழ்ச்சி                                        Jeya_Parthiban


for more

And 
http://aatralarasau.blogspot.in/2012/10/blog-post_11.html?showComment=1353351595693

Sunday, November 18, 2012

Jeya Parthiban travels

now Chennai Times                                                                                              19/11/2012 11.32Am





















 



 Each and every one have a Life , Story , and Travel It's he and i travel  photography 

thank to

 Sri Balaji for camera provide
 Guna sir ( American college ) ( Artist )
 Anbuvanthan sir for Motivation  
 kannan , Rakesh () Artist 
 Madurai police  for help
 Theni peoples for co-operation 


Jeya_Parthiban
97510-25525


Muthurasu short film trailer







Saturday, November 17, 2012

Awesome Photoshop CS6

Amazing things in Now ...

 Watch it ...

எனது ஒவியங்களும் புகைப்படங்களும் என் எண்ணங்களும்





னம் புரியாத ஓர் உணர்வு 
உணர்ச்சிகளின் சிறு வடிவமாக 


பலமுறை பல கேள்விகளை
எழுப்பிய உணர்வு !
பதில் யோசித்து யோசித்து
அதில் என்னை மறந்த உணர்வு !



சந்தோஷங்களில் மூழ்குகின்ற‌ உணர்வு !
கண்ணீரிலும் கரைகின்ற‌ உணர்வு !
உண‌ர்வுக‌ள் அலைமோதிட‌ 
உணர்ச்சிக‌ள் த‌தும்ப‌
பலப்பல கற்பனைகளை 
வளர்த்த உணர்வு !
சில கவிதைகளையும் 
படைத்த உணர்வு !



எண்ணற்ற மாற்றங்களை 
என் உள்ளம் சந்தித்த போதிலும் 
மாறாதொரு உணர்வு !
அதே உள்ளம் 
சோகத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு 
உயிர் இழந்து 
மறந்த போதிலும் 
மறக்காதொரு உணர்வு !



சொல்ல தவறிய வார்த்தைகளுக்காக‌
இன்று சொல்ல நினைத்தும் 
முடியாமல் தவிக்கின்ற‌ உணர்வு !



சொல்லாமலே உள்ளுக்குள்
உறைந்து கிடக்கும் உணர்வு !
இறுதிவரை என்னுள்ளே 
வாழ்ந்து கொண்டிருக்க போகும் உண‌ர்வு !

                                                                         Some one with my feel




ஒரு  வேளை அவள்  இப்படியோ   


My Click



18th Nov 2012                                                                                                                                                                 Sun 12.37Am chennai 


தமிழ் திரை

The About Tamil Movie Best Directors & Reviews












It's Jeya Parthiban

17th Nov 2012                                                                                                    Sat 11.20pm in Chennai


I Wish You to Travel Me.....

WELCOME TO ALL....